ஜனவரி மாதத்தில் இலங்கைக்கு வருகைதந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை 24.3 சதவீதத்தால் அதிகரித்து 194,280 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இக்காலப்பகுதியில் இந்தியாவில் இருந்து வருகைதந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து முதல் இடத்தை வகிப்பதுடன் சீனா இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது.
அந்த வகையில் ஜனவரி மாதத்தில் இந்தியாவில் இருந்து வருகைதந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 28,895 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் சீனாவில் இருந்து வருகைதந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் 122 சதவீதத்தால் அதிகரித்து 26,083 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதே வேளை ரஷ்யாவிலிருந்து வருகைதந்த சுற்றுலாப்பயணி களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.அதன் படி இவ் எண்ணிக்கை 8,358 ஆக பதிவு செய்யப்பட்டு கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் 10 சதவீத வீழ்ச்சியினை பதிவு செய்துள்ளது.ஐக்கிய இராஜ்ஜியத்தில் இருந்து வருகைதந்த சுற்றுலாப்பயணிக ளின் எண்ணிக்கை 16,253 ஆக 21 சதவீதத்தாலும் ஜேர்மனியில் இருந்து வருகைதந்தவர்களின் எண்ணிக்கை 12,760 ஆக 23 சதவீதத்தாலும் கடந்த மாதத்தில் வளர்ச்சி நிலையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த வருடத்தின் ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் இரண் டாவதாக சதவீத அடிப்படையில் அதிக சுற்றுலாப்பயணிகள் வருகைத்தந்த நாடாக உக்ரைன் இடம் பிடித்துள்ளது. அவ்வாறு உக்ரைனில் இருந்து வருகைதந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை 4,662 ஆக 40.8 சதவீதத்தால் அதிகரித்துள்ளது