Breaking
Sun. Dec 22nd, 2024

யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலாச் சென்ற தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகள்  யாழ்ப்பாணம், மல்லாகத்தில் தங்கியிருந்த வீடு ஒன்றின் மீது இனம் தெரியாத நபர்கள் கல்லெறிந்தமையால் குறித்தப் பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

தென்னிலங்கையில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் சுற்றலாப் பயணிகள் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் இல்லங்களில் இரவு நேரத்தை கழித்து வருவது வழமையாகும்.
அந்த வகையில் மல்லாகம் பகுதியில் உள்ள தனியார் வீட்டில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகள் வந்து தங்கிய  வேளையில் நள்ளிரவு நேரம் சில விசமிகள் திட்டமிட்டு அந்த வீட்டின் மீது கல்லெறிந்து தாக்கிவிட்டு சென்றுள்ளார்கள்.

குறித்த செயலானது இனவாதத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் பெரும் பதட்டம் அடைந்த தென்னிலங்கை சுற்றுலாப்பயணிகள் உடனடியாக அந்த வீட்டில் இருந்து நள்ளிரவே வெளியேறிவிட்டார்கள்.

ஆனாலும் குறிப்பிட்ட சம்பவம் சம்பந்தமாக தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் வீட்டின் உரிமையாளர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள். vk

Related Post