சுற்றுலா தலைமைத்துவம் தொடர்பான சர்வதேச மாநாடு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 28ஆம் திகதி பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
2020ம் ஆண்டில் உயர்நிலை வருமானத்தைக் கொண்ட சுற்றுலாத்துறை நாடாக இலங்கையை தரமுயர்த்துவதே இம்மாநாட்டின் நோக்கம் என்று கலாநிதி காமினி பெரேரா தெரிவித்துள்ளார்.
இம்மாநாட்டில் உலக நாடுகளின் புத்திஜீவிகள் கலந்துகொள்ளவுள்ளனர் என்றும் சர்வதேச சுற்றுலா தினத்திற்கு அமைய பாடசாலை மாணவர்களை தெளிவுபடுத்துதல் பாதயாத்திரை, மரநடுகை, கிரிக்கெட் போட்டி முதலானவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் சுரங்க டி சில்வா மகாநாடு தொடர்பாக விளக்கமளித்தார்.