Breaking
Thu. Jan 16th, 2025

யாழ். மாவட்டத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கான  கையேடு  இன்று காலை 10.30 மணிக்கு யாழ். மாவட்ட செயலகத்தில் வெளியிட்டுவைக்கப்பட்டது.இது தொடர்பாக கருத்து தெரிவித்த யாழ் மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம்,யாழ். மாவட்டத்தின் சுற்றுலாத்துறை அபிவிருத்திக்காக  அடையாளம் காணப்பட்ட சுற்றுலா இடங்கள், அவசர தொலைபேசி எண்கள் மற்றும் பாதை விபரங்கள்  அடங்கிய முதலாவது கையேடு இன்று வெளியிட்டுவைக்கப்படுகிறது.வெளிமாவட்ட மக்களின் சிரமங்களை நீக்குவதற்காகவே இந்த கையேடு வெளியிடப்படுகிறது.இந்தக் கையேட்டில் தெரிவு செய்யப்பட்ட 52 இடங்கள் மட்டுமே காணப்படுகின்றன. இது எமது மாவட்டத்தின் சுற்றுலாத்துறையை முன்னேற்றுவதற்கு ஏதுவாக அமையும் என எதிர்பார்க்கிறோம். இது எமது கன்னி முயற்சியாகும். எனவே இதனை மேம்படுத்துவதற்கு அனைவரதும் ஒத்துழைப்பை வேண்டிநிற்கிறோம்.இதேவேளை நாவற்குழி களஞ்சிய சாலைக்கு முன் சுற்றுலா தகவல் நிலையம் மற்றும் வாழ்வின் எழுச்சி உள்ளுர் உற்பத்தி பொருட்களின் நிலையம் ஒன்றுயும் அமைக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.

Related Post