Breaking
Sat. Mar 15th, 2025

பம்பலப்பிட்டி வர்த்தகர் மொஹமட் சுலைமானின் படுகொலை சம்பவம் தொடர்பில் மேலும் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த ஐவரையும் இன்று பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

மேலும் இந்தக் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வான் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்த கொலை தொடர்பில் நேற்று கிரேன்ட்பாஸ் மற்றும் ஆட்டுப்பட்டித் தெருவைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டதுடன், இவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளில் பலர் கைது செய்யப்படலாம் என பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

இதன்படி இன்று மேலும் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மொஹமட் சுலைமான் மாவனெல்ல, ஹெம்மாதகம பிரதேசத்தில் இருந்து கடந்த 25ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post