Breaking
Wed. Nov 20th, 2024
சுவிட்ஸர்லாந்தின் ஜிஎஸ்பி வரிசலுகையை பயன்படுத்துவதன் மூலம் இலங்கை தனது ஏற்றுமதியையும் மொத்த இருதரப்பு வர்த்தகத்தினையும் அதிகரிக்க முடியும் என இலங்கைக்கான சுவிட்ஸர்லாந்து தூதுவர் ஹின்ஸ் வாக்கர்-நெட்கரோன் தெரிவித்தார்.  கடந்த வாரம் கொழும்பு 03 இல் அமைந்துள்ள கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் வளாகத்தில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடனான  சந்திப்பொன்றின் போதே அவர்  இதனை தெரிவித்தார்.
சுவிட்சர்லாந்து தூதுவர்  மேலும் இங்கு கருத்து தெரிவிக்கையில்:
இலங்கை – சுவிட்சர்லாந்து இடையிலான இருதரப்பு வர்த்தகம் ஒரு வலுவான குறுகிய கால வளர்ச்சியைக் காட்டுகிறது.   சுவிட்சர்லாந்து மத்திய ஐரோப்பிய நாடு ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கம் அல்ல. எங்களுடைய சுவிஸ் ஜிஎஸ்பீ 1971 ஆம் ஆண்டில்,நடைமுறைபடுத்தப்பட்டது. அதே நேரம் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு முன்னோடி இருக்கும் ஜி.எஸ்.பீ.யும் அமுலுக்கு வந்தது. இலங்கை ஏற்றுமதியாளர்கள் இந்த சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். சுவிச்சர்லாந்து பொருளாதாரத்தில் நிதி சேவைகள்  நன்கு அபிவிருத்தியடைந்த சேவைதுறையாக உள்ளது. உற்பத்தி மற்றும் வர்த்தக பொருட்கள் மீதான  தேவை தொடர்ந்து சுவிச்சர்லாந்துக்கு இருப்பதால் அவற்றை நாம் கொள்ள முடியும்.  சுவிட்சர்லாந்தின் ஜிஎஸ்பி வரிசலுகையை பயன்படுத்துவதன் மூலம் இலங்கை தனது ஏற்றுமதியையும் மொத்த இருதரப்பு வர்த்தகத்தினையும் அதிகரிக்க முடியும். சுவிஸ் உற்பத்தித் தொழில்துறை உயர் தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்றுள்ளது. வர்த்தக மற்றும் அபிவிருத்திக்கான ஐக்கிய நாடுகளின் மாநாட்டின் சர்வதேச வர்த்தகத்தின் பொருட்கள் மற்றும் சேவைகள்  சலுகைகள் மீதான  சுவிஸ் ஜிஎஸ்பி 1971 ஆம் ஆண்டில் அமுலுக்கு வந்தது. இதனுடாக சுவிஸ் சந்தையில் இலங்கையின் உற்பத்தி பொருட்களுள் ஆடை மற்றும் துணிவகை, தேங்காய்,காலணி,தலைக்கவசம்,மின்சார இயந்திரங்கள், குறிப்பிட்ட சில பழ வகைகள் வெப்பமண்டல பழங்கள் மற்றும் மசாலா, அலங்கார மீன்கள்;, சில வகையான நன்னீர் மீனகள்;, வெட்டு மலர்கள் மற்றும் ,தக்காளி, வெங்காயம்,பூண்டு, முட்டைக்கோஸ் , காலிஃபிளவர்,பீன்ஸ் வகைகள்,இனிப்பு சோளம், பட்டாணி ,கிட்னி பீன்ஸ், இஞ்சி ,கடுகு மற்றும் மஞ்சள் ஆகிய ஏற்றுமதி பொருட்களுக்கு முற்றிலும் இலவச வரியினை அனுமதிக்க செய்யதை தொடர்ந்து இலங்கை ஏற்றுமதியாளர்கள் பல வசதிகளைப் பெற்றுக்கொண்டனர் என்றார்.
இங்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கருத்து தெரிவிக்கையில்:
தற்போது எமது இருதரப்பு வர்த்தகம் அதன் உண்மையான ஆற்றலை விட குறைவாக இருப்பதை நான் ஏற்றுக்கொள்கின்றேன். 1971 ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி ஆரம்பித்த அதே நேரத்தில் சுவிஸ் ஜி.எஸ்.பியும் நடைமுறைப்படுத்தப்பட்டது என்பதையும் நான் புரிந்துக்கொண்டுள்ளேன்.  கடந்த வருடம் எங்கள் வருடாந்த வர்த்தகம் 65 சத வீதம் மிக வலுவாக அதிகரித்துள்ளது. எனவே, இலங்கை ஏற்றுமதியாளர்கள் சுவிஸ் ஜி.எஸ்.பி சலுகைளினை எவ்வாறு பயன்படுத்த முடியும் என்பதைப் நன்கு ஆலோசிப்பது நல்லது.
இலங்கை – சுவிஸ் இருதரப்பு வர்த்தகம் அதிகரித்த வரும் போக்கை காட்டிய போதிலும்,
பரவலாக அறியப்படாத சாத்தியங்கள் உள்ளதால் தடைகளை சமாளிக்க ஜிஎஸ்பி சலுகைகள் எமக்கு உதவியாய் இருக்கும். வர்த்தகத் திணைக்களத்தின் அறிக்கையின் படி, 2016 ஆம் ஆண்டில்  சுவிட்சர்லாந்துக்கான எமது மொத்த ஏற்றுமதி 102.23 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். கடந்த ஆண்டு சுவிட்சர்லாந்திற்கான இலங்கை ஏற்றுமதியின் முக்கிய பொருட்களாக மின்னணு இயந்திரங்கள் மற்றும் மின் கட்டுப்பாடுகள்  இருந்தன. இதன் மொத்த ஏற்றுமதி 44 சத வீதமாகும். சுவிஸின் ஜிஎஸ்பி பயன்படுத்துவதன் மூலம், எமது உணவு, பழங்கள் மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட மற்ற பொருட்களுடான ஏற்றுமதியினை விரிவுபடுத்த முடியும்.
நெஸ்லே, பௌபர் அன் கோ , ஹோல்க்சிம்  மற்றும் குயென் நாகல்

என்பன  இலங்கையில் நன்கு அறியப்பட்ட சுவிஸ் முதலீடுகள் ஆகும் என்றார் அமைச்சர் ரிஷாட்

Related Post