Breaking
Thu. Jan 9th, 2025

கடந்த வருடத்தில் சுவிட்ஸர்லாந்தில் அரசியல் அடைக்கலம் கோரியுள்ளவர்களில் இலங்கையர்கள் மூன்றாம் இடத்தை பெற்றுள்ளனர்.இதன்படி 1277 இலங்கையர்கள் அரசியல் அடைக்கல கோரிக்கையை முன்வைத்துள்ளனர். இது முன்னைய ஆண்டுக்களை காட்டிலும் 87 வீத அதிகரிப்பாகும்.

இந்தநிலையில் மொத்தமாக சுவிட்ஸர்லாந்தில் அடைக்கலம் கோரியவர்களின் எண்ணிக்கை கடந்த காலங்களை விட 11 வீதத்தால் அதிகரித்து 23,765ஆக இருந்தது.பல்வேறு நாடுகளிலும் இடம்பெற்று வரும் உள்நாட்டு பிரச்சினைகளே இதற்கான காரணங்களாகும்.இதன்படி எரிட்ரியாவில் இருந்து அதிகமான 6923 பேர் சுவிட்ஸர்லாந்தில் கடந்த வருடம் அடைக்கலம் கோரினர்.

2014ஆம் ஆண்டின் சந்தோசமான நாடுகள் வரிசையில் சுவிட்ஸர்லாந்தே முதல் நிலை பெற்றுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Related Post