Breaking
Sun. Dec 22nd, 2024

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியகுழு, எதிர்வரும் வியாழக்கிழமை கூடவிருப்பதாக, அக்கட்சி வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.

கட்சியை மறுசீரமைத்தல், மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள புதியவர்களுக்கான பொறுப்புகள், கடமைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும், ஏனைய விவகாரங்கள் குறித்தும் கலந்துரையாடுவதற்காகவே, மத்தியக் குழு அவரசமாக கூடவிருப்பதாக அறியமுடிகின்றது.

இதேவேளை, குருநாகலில் ஞாயிற்றுக்கிழமையன்று கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன, தலைமையில் நடைபெற்ற  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 65ஆவது மாநாட்டுக்கு சமூகமளிக்காத ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கு எதிராக மேற்கொள்ளவேண்டி நடவடிக்கைகள் தொடர்பில் இந்த கூட்டத்தின் போது  முக்கியமாக ஆராயப்படும் என்றும் அத்தகவல் தெரிவித்தது.

இந்த மாநாட்டுக்கு கட்சியின் போஷகரும், முன்னாள் ஜனாதிபதியும் எம்.பியுமான மஹிந்த ராஜபக்ஷவும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச்சேர்ந்த உறுப்பினர்களும் சமூகமளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

By

Related Post