Breaking
Mon. Dec 23rd, 2024

ஜனா­தி­பதி மைத்­தி­ரிபால சிறி­சே­னவின் தலை­மையில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் 64ஆவது ஆண்டு பூர்த்தி மாநாடு நேற்று பொலன்­ன­று­வையில் நடை­பெற்றது. முன்
னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ உள்­ளிட்ட கட்­சியின் உறுப்­பி­னர்கள் அனை­வரும் இந்த மாநாட்டில் கலந்­து­கொண்­டனர்.

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் 64வது ஆண்டு பூர்த்தி மாநாடு நேற்று பிற்­பகல் பொல­ந­று­வையில் கது­ரு­வெல ரஜ­ரட்ட நவோ­தைய மைதா­னத்தில் நடை­பெற்­றது. கட்­சியின் தலைவர் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் தலை­மையில் நடை­பெற்ற இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் முன்னாள் தலை­வர்­க­ளான சந்­தி­ரிக்கா குமா­ர­துங்க மற்றும் மஹிந்த ராஜபக் ஷ உள்­ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்­தரக் கட்­சியின் உறுப்­பி­னர்கள் அனை­வ­ருக்கும் அழைப்பு விடுக்­கப்­பட்­டி­ருந்­தது. அதேபோல் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் ஆத­ர­வா­ளர்கள் அனை­வ­ருக்கும் கட்­சியின் சார்பில் அழைப்பு விடுக்­கப்­பட்­டி­ருந்­தது.

கட்­சியின் 64ஆவது ஆண்டு பூர்த்தி மாநாட்டில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ மற்றும் கட்­சியின் சிரேஷ்ட உறுப்­பி­னர்­க­ளான நிமல் சிறி­பா­லடி சில்வா, சுசில் பிரே­ம­ஜெ­யந்த, அனுர பிரி­ய­தர்­சன யாப்பா மற்றும் கட்­சியின் பொதுச்­செ­ய­லாளர் துமிந்த திசா­நா­யக உள்­ளிட்ட கட்­சியின் உறுப்­பி­னர்கள் அனை­வரும் கலந்­து­கொண்­டிருந்­தனர். எனினும் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிக்கா குமா­ர­துங்க இந்த நிகழ்வில் கலந்­து­கொள்­ளவார் என தெரி­விக்­கப்­பட போதிலும் நேற்­றைய மாநாட்டில் அவர் பங்கேற்கவில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

மேலும் கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலின் பின்னர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கட்­சியின் தலைமைப் பத­வியை ஏற்­றுக்­கொண்டபின் அவ­ரது தலை­மையில் நடை­பெற்ற முத­லா­வது கட்சி மாநாடு இது என்­பதும் குறிப்­பி­டத்­தக்க விசேட அம்­ச­மாகும்.

இந்த மாநாட்டில் பங்கேற்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் மேடையில் அருகருகே இருந்து  உரையாடிக்கொண்டிருந்ததையும் காணக்கூடியதாக இருந்தது.

Related Post