Breaking
Mon. Dec 23rd, 2024

புதிய தேர்தல் முறைமை தொடர்பில் பிர­தான கட்­சி­க­ளுக்கும் சிறு மற்றும் சிறு­பான் மைக் கட்­சி­க­ளுக்கும் இடையில் வித்­தி­யா­ச­மான கருத்து வேறுபாடுகள் இருக்­கின்­றன.

எனவே பாரா­ளு­மன்­றத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் அனைத்து சமூகப் பிர­தி­நி­தி­க­ளி­ன தும் மக்­க­ளி­னதும் கருத்­துக்­களை அறிய வேண்­டிய தேவை ஜனா­தி­ப­திக்கு இருப்­ப­தா­லேயே 20ஆவது திருத்தம் தொடர்பில் விவாதிக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. என்று பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்க நேற்று சபையில் தெரி­வித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யா­னது எஸ். டப்ளியூ.ஆர்.டி. பண்­டா­ர­நா­யக்­க­வினால் ஸ்தாபிக்­கப்­பட்­ட­தாகும்.

அக்­கட்­சி­யா­னது பல சந்­தர்ப்­பங்­களில் ஸ்ரீமாவோ பண்­டா­ர­நா­யக்க மற்றும் சந்­தி­ரிக்கா குமா­ர­துங்க ஆகி­யோரால் பாது­காக்­கப்­பட்­டதைப் போன்று 2005ஆம் ஆண்டு புலி­களின் தலைவர் பிர­பா­க­ர­னாலும் பாது­காக்­கப்­பட்­டது என்றும் அவர் கூறினார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்­கி­ழமை இடம்­பெற்ற புதிய தேர்தல் முறைமை தொடர்­பான சபை ஒத்­தி­வைப்பு வேளை பிரே­ரணை மீதான விவா­தத்தில் கலந்­துக்­கொண்டு பேசு­கை­யி­லேயே பிரதமர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

பிர­தமர் இங்கு மேலும் கூறு­கையில்,

நிறை­வேற்று அதி­கா­ரத்தை இல்­லா­தொ­ழிப்­ப­தையும் 17ஆவது திருத்­தத்தை மீண்டும் அமுல்­ப­டுத்தும் நோக்­கி­லே­யுமே நாம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை ஏற்று செயற்­பட்­டி­ருந்தோம். அதே­போன்­றுதான் விருப்பு வாக்கு முறையை இல்­லாது செய்யும் வகையில் தேர்தல் திருத்தம் ஒன்றை அறி­மு­கப்­ப­டுத்­து­வ­தென்றும் இணங்­கப்­பட்­டி­ருந்­தது.
புதிய தேர்தல் முறை மற்றும் 20ஆவது திருத்தம் தொடர்பில் நாட்டு மக்கள் அறிந்­துக்­கொள்ள வேண்டும் என்ற கார­ணத்­திற்­கா­கவே வர்த்­த­மானி அறி­வித்தல் மூலம் 20ஆவது உத்­தேச அர­சியல் திருத்தம் வெளி­யிடப்பட்டுள்­ளது.

அத்­துடன் இவ்­வி­டயம் தொடர்பில் இப்­பா­ரா­ளு­மன்­றத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் உறுப்­பி­னர்­க­ளது நிலைப்­பா­டுகள் என்ன என்­பது தொடர்­பிலும் ஜனா­தி­பதி தெரிந்­துக்­கொள்ள வேண்­டி­ய­வ­ராக இருக்­கிறார்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் விருப்பின் பேரி­லேயே 20ஆவது திருத்தம் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. மாறாக இது எனது விருப்பின் பேரில் அல்ல. அந்த வகை­யி­லேயே யோக­ராஜன் எம்.பியினால் முன்­வைக்­கப்­பட்­டுள்­ள­தான சபை ஒத்­தி­வைப்பு வேளை பிரே­ர­ணையும் அமைந்­தி­ருக்­கின்­றது.

ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியை ஸ்தாபித்த எஸ்.டப்­ளியூ.ஆர்.டி.பண்­டா­ர­நா­யக்க தமது சொத்­துக்­களை விற்று தேர்­தலில் குதித்து தமது கட்­சியை பாது­காத்­தது போன்று பிற்­கா­லத்தில் ஸ்ரீமாவோ பண்­டா­ர­நா­யக்க சு.க.வை காப்­பாற்­றினார்.

அதே­போன்று சு.க. பிள­வுப்­பட்டு கிடந்த 1977ஆம் ஆண்டின் பின்­ன­ரான காலப்­ப­கு­தியில் 1994இல் சந்­தி­ரிக்கா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க கட்­டிக்­காத்தார். ஆனாலும் 2005ஆம் ஆண்டு காலப்­ப­கு­தியில் சுதந்­தி­ரக்­கட்­சியை பிர­பா­க­ரனே காப்­பாற்­றினார். அன்று தமிழ் மக்­களை வாக்­க­ளிக்க விட்­டி­ருந்தால் மஹிந்த ராஜ­பக் ஷ அன்றே தோல்­விக்­கண்­டி­ருப்பார்.
2015ஆம் ஆண்டு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன வெற்றி பெற்­றதும் பாரா­ளு­மன்­றத்தை கலைத்­தி­ருந்தால் இங்கு யாரும் இருந்­தி­ருக்க மாட்­டார்கள். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை சு.க.வின் தலை­வ­ராக்கி விட்டு அவரை தற்­போது அப்­ப­த­வி­யி­லி­ருந்து நீக்­கி­வி­டு­வ­தற்கே சுதந்­தி­ரக்­கட்­சி­யினர் செயற்­பட்டு வரு­கின்­றனர்.

ஜனா­தி­ப­தியின் முன்­னெ­டுப்­புக்­க­ளுக்கு அவ­ரது கட்­சியை சேர்ந்­தவரும் எதிர்க்கட்சித் தலைவருமான நிமல் சிறிபாலடி சில்வா ஒத்­து­ழைப்­புக்­களை வழங்க வேண்டும்.

20ஆவது திருத்தம் எனப்படுகின்றதான புதிய தேர்தல் முறைமையை மாற்றியமைக்க வேண்டுமென்ற தேவை சு.க.வுக்கு இருந்திருப்பின் அதனை மூன்றில் இரண்டு பெரும்பான்மையினர் கொண்டிருந்த முன்னைய அரசாங்கம் செய்திருக்க வேண்டும். ஆனால் அது இடம்பெறவில்லை. வெறுமனே இன்று எம் மீது குறைகூற முடியாது. எம்மை பொறுத்தவரையில் நாம் இந்நாட்டின் அனைத்து சமூகத்தினரையும் அரவணைத்து செயற்பட்டு வருகின்றோம் என்றார்.

Related Post