சூடானிய அதிபர் ஓமார் அல் பஷீரை தென்னாப்பிரிக்காவை விட்டு வெளியேறமுடியாதவாறு விதிக்கப்பட்டுள்ள உத்தரவை அந்நாட்டு நீதிமன்றம் ஒன்று நீட்டித்துள்ளது.
அவரைக் கைதுசெய்து, போர்க்குற்ற விசாரணைகளுக்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் ஒப்படைக்க வேண்டுமா என்பது தொடர்பான இன்னொரு விசாரணை திங்களன்று நடக்கவுள்ளது.
ஆப்பிரிக்க யூனியன் மாநாட்டுக்காக அல் பஷீர் ஜொஹன்னஸ்பர்க் நகரில் உள்ளார். ஏனைய ஆப்பிரிக்கத் தலைவர்களுடன் அவர் சேர்ந்து நிற்கும் நிழற்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
அவர் கைதுசெய்யப்படுவதற்கான வாய்ப்பு இல்லை என்றும் மாநாடு முடிந்து அவர் நாடுதிரும்புவார் என்றும் சூடானின் வெளியுறவு அமைச்சர் முன்னதாக கூறியிருந்தார்.
-BBC-