Breaking
Tue. Nov 26th, 2024

பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் கிறிஸ் நோனிஸ் மீதான தாக்குதல் குறித்து விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.

பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் கிறிஸ் நோனிஸுக்கு எதிராக புதிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. எனினும் என்ன குற்றச்சாட்டு என்ற விடயம் வெளியாகவில்லை.

ஏற்கனவே கடந்த வாரத்தில் ஜனாதிபதி குழுவினர் அமரிக்காவுக்கு சென்றிருந்தபோது பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கிறிஸ் நோனிஸின் கன்னத்தில் அறைந்ததாக குற்றம் சுமத்தப்பட்டது.

இதனையடுத்து நோனிஸ் தமது பதவிவிலகல் கடித்தை சமர்ப்பித்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில் வெளியுறவு அமைச்சின் செயலாளர் சேனுகா செனவிரட்ன, நோனிஸ் மீது குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும், என்ன குற்றச்சாட்டு என்பதை தெரிவிக்கவில்லை. இதனையடுத்து நோனிஸ் தாக்கப்பட்டமை மற்றும் சேனுகா, நோனிஸ் மீது சுமத்திய குற்றச்சாட்டு ஆகியன தொடர்பில் விசாரணைக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

Related Post