Breaking
Mon. Dec 23rd, 2024

பல்கீஸ் நாயகியின் இராட்சியம் (PHOTOS)

1

ஓமான் நாட்டில் இருக்கும் பல்கீஸ் நாயகியின் அரண்மனை

அல் குர்ஆனில் சூரதுல் நம்லில் சுலைமான் நபியுடன் சபா என்ற நாட்டின் அரசியான பல்கீஸ் சம்பந்தமாக பல வசனங்கள் இருக்கின்றன.

சபா என்ற இராட்சியம் தற்போதைய ஏமனை மையமாக கொண்டு ஓமான், சூடான் மற்றும் எதியோப்பியா பகுதிகளை உள்ளடக்கியதாக இருந்திருக்கின்றது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். ஏனெனில் பல்கீஸ் அரசியால் சுலைமான் நபிக்கு வழங்கப்பட்ட முத்து, ரத்தினம் மற்றும் தங்கம் என்பன இந்த பகுதிகளில் கிடைத்திருப்பதற்கான பல தடயங்களுடன் இதற்காக தோண்டப்பட்ட இடங்கள் கூட இன்றுவரை சாட்சியாக இருக்கின்றன.

பல்கீஸ் நாயகி தனது இராட்சியத்தில் வெவ்வேறு பகுதிகளில் தங்குவதற்கு அமைக்கப்பட்ட ஒரே வடிவிலான அரண்மனைகள், அவர் குளிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட நீர்த்தடாகம் என்பன கண்டுபிடிக்கப்பட்டமை பல்கீஸ் ராணி தொடர்பான குரான் வசனங்களுக்கு சாட்சியாக இருக்கின்றன.

இதற்கும் மேலதிகமாக பழைய எதியோப்பிய ஏடுகளில் ஒன்றான Kebra Nagast என்று அழைக்கப்படும் ஏட்டில், தமது நாட்டில் ஒரு ராணி இருந்தததாகவும் அவருக்கு ஒரு காலில் மாத்திரம் முடிகள் இருந்தததாகவும் அவருடைய தங்க சிம்மாசனம் வேறொரு நகருக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் எழுதப்பட்டு இருக்கிறது. நபி (ஸல்) அவர்கள் பிறப்பதப்பதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எதியோப்பியாவில் பழைய ஏடுகளில் ஆபிரிக்க பழங்குடி மொழிகளில் எழுதப்பட்டு இருக்கும் வரலாற்று தகவல் மக்காவில் பிறந்த முஹம்மது (ஸல்) அவர்களுக்கு தெரிந்திருப்பதற்குரிய ஒரே ஒரு வழி இறைவனால் கொடுக்கப்பட்ட வஹி அன்றி வேறு எதுவாக இருக்கமுடியும்.

seat-of-queen-of-sheba-yemen

யெமன்  நாட்டில் இருக்கும் அரண்மனை

Lucys_Legacy-21

எதியோப்பியா நாட்டில் இருக்கும் அரண்மனை

1DSC00410

சூடான் கடற்கரையில் இருக்கும் அரண்மனை

Bu0sP6TIIAAYq67

எதியோப்பியாவில் இருக்கும் நீச்சல் தடாகம்

Related Post