இருபத்தி நான்கு மணிநேரமும் சூரிய ஒளி இருக்கும் ஆர்டிக் வட்ட பிராந்தியத்தில் பகல் வேளையில் ரமழான் நோன்பை கடைப்பிடிக்க அங் குள்ள முஸ்லிம்களுக்கு புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.
ஜுன் 18ஆம் திகதி ரமழான் நோன்பு ஆரம்பமாகும் நிலையில் சூரியன் மறையும்வரை உண்ணவோ, குடிக்கவோ கூடாது என்று சுவீடன் முஸ்லிம் அமைப்பொன்று புதிய வழிகாட்டியை வழங்கியுள்ளது. எனினும் ரமழான் ஆரம்பித்து மூன்று நாட்களில் அங்கு ஆண்டின் மிக நீண்டநாள் பதிவாக வுள்ளது.
“ஆர்டிக் வட்டத்தின் வடபகுதியில் இருப்பவர்கள் எப்போது நோன்பை விடுவது என்பது மட்டுமன்றி, எப்போது பிடிப்பது என்பது பற்றியும் எமக்கு சிக்கலான கேள்விகள் உள்ளன” என்று சுவீடன் இஸ்லாமிய அமைப்பின் பேச்சாளர் ஒருவர் ஏ.எப்.பி. செய்திச் சேவைக்கு குறிப்பிட்டார்.
“சூரிய உதயத்தின்போது நோன்பை ஆரம்பிக்கலாம். ஆனால் கோடை மாதங்களில் உண்மையான சூரியோதயம் ஒன்றில்லை” என்றும் குறிப் பிட்டார். எனினும் இந்த வழிகாட்டி மேலும் ஒழுங்குபடுத்தப்பட வேண்டி இருப்பதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.