Breaking
Fri. Nov 29th, 2024

சூரிய குடும்பத்தில் பூமியைத் தவிர ஏனைய 8 கிரகங்களிலும் பூமியைப் போன்ற சிக்கலான உயிர் வாழ்க்கை இருப்பதற்கான ஆதாரம் மனிதனுக்கு இதுவரை கிடைக்கவில்லை.

மேலும் பிரபஞ்சத்தில் வேறு பல நட்சத்திரங்களைச் சுற்றி வரும் பிற கிரகங்கள் ஏதாவது பூமியைப் போன்ற உயிர் வாழ்க்கைக்கு சாதகமான சூழ்நிலைகளுடன் உள்ளனவா எனவும் மனித இனம் பல நூற்றாண்டுகளாகவே ஆராய்ந்து வருகின்றது. இந்நிலையில் நமது சூரிய குடும்பத்துக்கு  மிக அருகில் அமைந்துள்ள நட்சத்திரமான ப்ரொக்ஸிமா சென்டௌரி மற்றும் அல்ஃபா சென்டூரி A அல்லது B ஆகிய மூன்று நட்சத்திரத் தொகுதிகளில் பூமியைப் போல் இரு கிரகங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன.

தற்போது இந்த அல்ஃபா சென்டௌரியின் A மற்றும் B ஆகிய நட்சத்திரங்களைச் சுற்றி வரும் இரு கிரகங்கள் பூமியைப் போன்று தண்ணீரிலான கடல்களைக் கொண்டு மறைந்திருக்கலாம் என வானியலாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். சுமார் 4.3 ஒளியாண்டுகள் தூரத்திலுள்ள இவ்விரு கிரகங்களிலும் தரை மேற்பரப்பு வெப்பநிலை 1500 டிகிரி ஆக அதாவது மிக அதிகமாக இருப்பதால் நமது பூமியிலுள்ளது போன்று உயிரினங்கள் வாழ்வதற்குச் சாத்தியமில்லை என அவர்கள் கூறுகின்றனர். இதில் முதலாவது கிரகமான அல்ஃபா சென்டூரி Bb ஆனது 2012 ஆம் ஆண்டு கண்டு பிடிக்கப் பட்ட போதும் உடனடியாக அது தவறான அலார்ம் என விஞ்ஞானிகளால் நிராகரிக்கப் பட்டிருந்தது. தற்போது கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த வானியலாளர்களின் குழுவானது 2 ஆவது முறையாக குறித்த சான்றை ஹபிள் தொலைக் காட்டி மூலம் மறு பரிசீலனை செய்து இத்தகவலை உறுதிப் படுத்தியுள்ளனர். 2013 ஆம் ஆண்டிலும் 2014 ஆம் ஆண்டிலும் தொடர்ச்சியாக 40 மணித்தியாலங்களுக்கு குறித்த நட்சத்திரத்தை ஆராய்ந்தே இவ்வாறு உறுதிப் படுத்தப் பட்டுள்ளது.

அதாவது அல்ஃபா சென்டூரி  நட்சத்திரத்தைச் சுற்றி பூமியைப் போன்ற கிரகம் வலம் வருவதும் அக்கிரகத்தின் ஒரு வருடமானது 20.4 தினங்கள் எனவும் கணிக்கப் பட்டுள்ளது. இக் கண்டு பிடிப்பானது சூரிய குடும்பத்தில் உள்ள ஏனைய கிரகங்களில் கூட வேறு விதமான உயிரினங்கள் இருக்கும் வாய்ப்பு உள்ளதற்கான ஊகத்தையும் அதிகரித்துள்ளது. 1915 ஆம் ஆண்டு சென்டாரௌஸ் நட்சத்திரத் தொகுதியில் கண்டு பிடிக்கப் பட்ட புரொக்ஸிமா சென்டௌரி என்ற நட்சத்திரத்தினதும் அல்ஃபா சென்டௌரி A மற்றும் B ஆகிய நட்சத்திரங்களினதும் ஆர்பிட்டல் காலம் 500 000 வருடங்களுக்கும் அதிகமாகும். சூரியனுக்கு மிக அண்மையில் இந்த நட்சத்திரங்கள் அமைந்துள்ள போதும் இவை மிகவும் மந்தமான பிரகாசம் உடையவை என்பதால் பூமியில் இருந்து வெறும் கண்ணால் பார்க்க இவை தென்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post