அரபிக் கடலில் நிலைகொண்டுள்ள சூறாவளியால் இலங்கையின் வானிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.சூறாவளி நிலைகொண்டுள்ள திசையை நோக்கி காற்றலைகள் நகர்கின்றமையால் மழை குறைவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அஷோபா என பெயரிடப்பட்டுள்ள இந்த சூறாவளி இலங்கைக்கு சுமார் 2000 கிலோமீற்றர் தொலைவில் அரபிக் கடலில் நிலைகொண்டுள்ளது.
இந்த சூறாவளி இலங்கையை நோக்கி நகர்வதற்கு எவ்வித சாத்தியமும் இல்லை என வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.இந்த சூறாவளிக்கு அஷோபா என இலங்கையினால் பெயர் சூட்டப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.