அஸ்ரப் ஏ சமத்
அரசாங்கம் கொண்டுவரும் 20வது தேர்தல் சீர்திருத்ததினை எதிர்காலத்தில் அமுல்படுத்தினால் சிறுபாண்மைச் சமுகமான முஸ்லீம் சகமுகத்தினது தற்போதுள்ள பாராளுமன்ற பிரநிதித்துவம் 50 வீதமாகக் குறைக்கப்பட்டு விடும்.
இச் சட்டத்தினால் முஸ்லீம் சமுகம் தமது இனவிகிதாசரதிற்கு ஏற்ப 10.3வீத முஸ்லீம்களுக்குரிய பாராளுமன்ற பிரநிதித்துவம் பெறும் வகையில் இச்சட்டம் திருத்தப்படல் வேண்டும். அல்லது இரட்டை வாக்குமுறை மாவட்ட விருப்பு வாக்கு முறையை உள்படுத்தப்பட வேண்டும். என ஷூரா கவுன்சில் கோரிக்கை.
எமது அமைப்பு ஏற்கனவே ஜனாதிபதியிடம் முஸ்லீம் சமுகத்தின் பிரநிதித்துவம் பற்றி 20ஆவது தேர்தல் சீர்திருத்தம் பற்றி பரிந்துறைகளை சமர்ப்பித்துள்ளோம்.
வட கிழக்கு உட்பட ஏனைய பிரதேசங்களிலும் முஸ்லீம்கள் ஏனைய சமுகங்களோடு பின்னிப் பினைந்து செறிந்து வாழ்வகின்றனர். அவர்களது மக்கள் பிரநிதித்துவம் பாதுகாக்கப்படல் வேண்டும்.
இந்த சட்ட மூலத்தினால் முஸ்லீம்கள் 10க்கும் குறைவான பாராளுமன்ற உறுப்பிணர்களை மாத்திரமே பெறக்கூடியதாக வாய்ப்பு உள்ளது. அதுவும் இவை கிழக்கில் சாத்தியமாகலாம். ஆனால்; கிழக்கு வெளியே வாழும் ஏனைய மாகாணங்கள்pல் உள்ள மாவட்டம் வாழும் மலைய மற்றும் முஸ்லீம்களது பிரநித்துவம் இரவோடு இரவாக இல்லாமல் செய்யப்பட்டு விடும். என ஷூரா சபையின் தலைவர் தாரிக் முஹம்மத் தெரிவித்தார்.
இன்று தேசிய ஷூறா சபை மேற்படி விடயமாக கொழும்பு தேசிய நூலக கேட்போர் மண்டபத்தில் நடாத்திய ஊடகவியலாளர் மாநர்ட்டிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
இம் மாகாநாட்டில் – ஷூரா சபையின் தலைவர் அல் ஹாஜ் தாரீக் மஹூமுத் பிரதித் தலைவர் சட்டத்தரணி ரீ.கே. அசுர், உப செயலாளர் அஷ்ஷேக் மசினுத்தீன் இனாமுல்லாஹ், உறுப்பிணர் எம்.எம்.எம் ஹசன் ஆகியோறும் இங்கு கருத்து தெரிவித்தனர்.
இந்த சூறா சபையானாது ஒரு சமுகத்திற்கு அநீதி நடக்கும்போது அதனை சுட்டிக்காட்டி அதனை திருத்திக்கொளவதற்கும் அம்மக்களது வாழ்வாதாரம், மீள்குடியேற்றம் அன்றாட பிரச்சினைகளை தீர்வு கானும் ஒரு அமைப்பாகும். ஆகவே தான் தற்போதைய 20ஆவ திருதம் பற்றிய எமது அபிப்பிராயத்தை அரசாங்கத்திற்கும், ஜனாதிபதிக்கும் அளுத்தமாக சொல்வது எமது கடமையாகும்.
இலங்கை அமைச்சரவையில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்த 20ஆவது தேர்தல் சீர்திருத்ததினால் தற்போது உள்ள பிரநிதித்துவம் கூட 50 வீதத்தினால் குறைக்கப்படுகினறது. அத்துடன் பாராளுமன்றத்தில் சிறுபான்மையினரது பிரநிதித்துவம் வெகுவாக பாதிக்கப்படும். குறிப்பாக வட கிழக்கு வெளியே வாழ்கி;;ன்ற மாகாணங்களில் வாழும் மலைய மற்றும் முஸ்லீம்களது பிரச்சிரனைகள், அபிவிருத்திகள் அம்மக்களது கல்வி, குடியிருப்பு, வாழ்வாதார அடிப்படை பிரச்;சினைகளுக்கு தீர்வு கானுவதற்கும் அதற்காக குரல் கொடுப்பதற்கும் யாருமே இல்லாமல் போகிவிடுவார்கள்.
இந்த நாட்டில் முஸ்லீம்கள் சிதறுன்டு வாழ்வதால் அவர்களது பிரநிதித்துவம் இந்த புதிய தேர்தல் முறையினால் இழக்க வேண்டி ஏற்படும்,
இவ் வியடத்தில் அரசியல் கட்சிகள் தேர்தல் வாக்கெடுப்பில் எடுக்கும் 4.5 வெட்டுப்புள்ளிகளைக் கூட நீக்கப்படல் வேண்டும். அத்துடன் தேர்தல் எல்லை நிர்ணயத்தினைசெய்யும் போது பிரதேசத்தில் சிறுபாண்மை இன மக்களது அபிலாசைகளையும் பூர்த்தி செய்து இந்த சட்டத்தினை அமுல்படுத்த வேண்டும். என ஷூரா சபை தெரவிக்கின்றது.