பொத்துவில், செங்காமம், அல்மினா மகா வித்தியாலயத்தின் பௌதிக வளங்களுக்கு காட்டு யானைகளின் மூலம் ஏற்படும் பாதிப்பு மற்றும் பாடசாலைச் சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் தொடர்பாக, பாடசாலையின் அதிபர் எம்.ஏ.ஸாஜகான், பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரபின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.
குறித்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்கு, நேற்று (16) பாடசாலைக்கு உடனடியாக களவிஜயம் மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர், அடுத்த நாளே யானை தடுப்பு வேலிகள் அமைக்கும் பணிகளை ஆரம்பிப்பதாக உறுதியளித்தார்.
அதற்கமைய, தடுப்பு வேலி அமைக்கும் பணி, இன்று (17) காலை முஷாரப் எம்.பியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நேற்றைய பாடசாலை களவிஜயத்தின் போது, பாடசாலையின் ஏனைய குறைபாடுகள் தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்ட முஷாரப் எம்.பி, எதிர்காலத்தில் அவற்றுக்கான தீர்வுகள் தொடர்பாக ஆராய்ந்து, குறைபாடுகள் நிவர்த்திக்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.