முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணியாட்தொகுதியின் பிரதானியான காமினி செனரத், அவரது மனைவி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் ஒன்பது பேரின் வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் 80 தொடர்பிலான கணக்குகள் குறித்த விவரங்கள் இரகசிய பொலிஸாரிடம் (சி.ஐ.டி) சமர்ப்பிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய உத்தரவிட்டுள்ளார். கடந்த அரசாங்கத்தின் போது காமினி செனரத், அரசாங்க நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக கிடைத்த முறைபாடு தொடர்பிலான அறிக்கையை இரகசிய பொலிஸார் நீதிமன்றத்தில் அறிக்கையிட்டனர். நிதி தூய்மையாக்கல் சட்டத்தின் கீழே இந்த முறைபாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் நிதி மோசடி பொலிஸ் பிரிவினால் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.