Breaking
Mon. Dec 23rd, 2024

சென்னையில் தொடரும் கடும் மழை காணரமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

வீதி, ரயில் போக்குவரத்து மற்றும் விமானம் போக்குவரத்தும் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. வரலாறு காணாத மழை பெய்துள்ளதால்,விமான நிலையத்திற்குள் தண்ணீர் புகுந்தது. விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னைக்கான இலங்கையின் ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ்  விமான சேவை தற்காலிகமாக இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

மேலும் விமானத்தின் ஓடுபாதையில் மழை நீர் தேங்கியிருப்பதாலும், பெய்து வரும் மழை காரணமாக ஓடுபாதை தெளிவாகத் தெரியாத நிலை இருப்பதாலுமே சென்னையிலிருந்து புறப்படும் அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகளும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.

கடும் மழை காரணமாக  சென்னைக்கு செல்லும் இருபதுக்கும் மேற்ப்பட்ட விமானங்களும் பெங்களூருக்கு அல்லது ஹைதராபாதுக்குத் திருப்பிவிடப்படுகின்றன. இதனால் சென்னை விமானநிலையம் தாற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

By

Related Post