Breaking
Sun. Dec 22nd, 2024

கடந்த ஆண்டு 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டி திறப்பு விழா நடைப்பெற்ற சென்னை விமான நிலையத்தில் அடிக்கடி மேற்கூரை, கண்ணாடிக் கதவு இடிந்து விழுந்து விபத்து நேரிட்டு வருகிறது. அதிகாரிகள் விசாரித்து வருவதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வந்தாலும், விசாரணையின் முடிவு என்னவென்று எந்தத் தகவலும் இன்னும் வெளியாகவில்லை.

இந்நிலையில் இன்று காலை விமான நிலையத்தின் 2 வது முனையத்தின் கண்ணாடிக் கதவு இடிந்து விழுந்தது. அந்த நேரத்தில் புதுவை ஆளுநர் விமான நிலையத்துக்கு வந்திருந்தார் என்றும் தகவல்கள் வெளியாகியது. கண்ணாடித் துகள்களை அகற்றி சுத்தம் செய்யும் வரை புதுவை ஆளுநர் விமான நிலையத்தில் காத்திருந்தார் என்று தெரிய வருகிறது.இந்த விபத்திலும் யாருக்கும் எந்தவித காயமும்,ஏற்படவில்லை என்பதுக் குறிப்பிடத் தக்கது.

Related Post