Breaking
Mon. Dec 23rd, 2024

எட்­டா­வது பாரா­ளு­மன்­றத்­திற்கு தெரிவு செய்­யப்­பட்­டுள்ள புதிய முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை விழிப்­பூட்டும் செயற்­றிட்­டத்­தினை அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா மேற்­கொள்ள வேண்டும் என அம்­பாறை மாவட்ட உலமா சபையின் முன்னாள் செய­லா­ளரும், அர­சினர் ஆசி­ரியர் கலா­சாலை விரி­வு­ரை­யா­ள­ரு­மான அஷ்­ஷெய்க் எப்.எம்.ஏ.அன்ஸார் மௌலானா கடிதம் மூலம் கோரிக்கை விடுத்­துள்ளார்.

எட்டு விட­யங்­களை உள்­ள­டக்கி, அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மாவின் தலைவர், செய­லா­ளரை விளித்து எழு­தப்­பட்­டுள்ள அவ­ரது கோரிக்கைக் கடி­தத்தின் பிர­திகள் தேசிய ஷுரா கவுன்சில், கிழக்கு முஸ்லிம் கல்விப் பேரவை என்­ப­ன­வற்­றுக்கும் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளன. அக்­க­டி­தத்தில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளதாவது,

எட்­டா­வது பாரா­ளு­மன்­றத்­திற்கு மொத்தம் 15 முஸ்லிம் உறுப்­பி­னர்கள் தெரி­வு ­செய்­யப்­பட்­டி­ருந்­தாலும், ஏழா­வது பாரா­ளு­மன்­றத்தில் 19 உறுப்­பி­னர்கள் அங்கம் வகித்­தனர். அந்­த­வ­கையில் முஸ்லிம் உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்­கையில் வீழ்ச்­சி­யேற்­பட்­டுள்­ளது. பிர­பல முஸ்லிம் அமைச்­சர்கள் உட்­பட முன்னாள் உறுப்­பி­னர்கள் ஏன் தோல்வி கண்­டனர் என்­பது ஆய்­வுக்­குட்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும்.

தனித்­துவ அர­சி­யலை மேற்­கொண்­டு­வரும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு 16 ஆச­னங்­க­ளுடன், நாட்டின் மூன்­றா­வது சக்­தி­யாக தோற்­றம்­பெற்­றுள்­ளது. இதே­வேளை, தனித்­து­வ­மான முஸ்லிம் கட்­சி­யொன்று ஒரே­யொரு ஆச­னத்தைப் பெற்­றி­ருப்­பது ஏன்?

நிரந்­தர அர­சியல் திட்டம் இந்­நாட்டில் முன்­வைக்­கப்­படும் போது, தமிழ்த் தேசியம் வலு­வான குர­லெ­ழுப்­பு­வ­தற்கும், முஸ்லிம் தேசியம் வலு­வற்ற குர­லாக, கணக்­கெ­டுக்­கப்­ப­டாத குர­லாக தோன்­று­வ­தற்கும் இது வழி­வ­குக்­கலாம்.

இவ்­வி­ட­யத்தில் புதிய முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் நிலைப்­பாடு எவ்­வாறு அமையப் போகின்­றது?

2015 ஆம் ஆண்டு ஜன­வரி 8 ஆம் திகதி முதல் நாட்டில் புதிய அர­சியல் கலா­சாரம், நல்­லாட்சி என்ற சொற்­ப­தங்கள் அடிக்­கடி பாவிக்­கப்­பட்­டு­வரும் நிலையில், ‘முஸ்லிம் தலை­மைகள் ஒற்­று­மைப்­ப­டுங்கள்’ என்ற கோரிக்கை முன்­வைக்­கப்­படும் போதெல்லாம் தலை­மைத்­து­வங்கள் வேறு­பட்­டி­ருக்­கலாம், முஸ்லிம் மக்கள் ஒற்­று­மைப்­ப­டுங்கள் என்று நொண்­டிச்­சாட்டு கூறப்­ப­டு­கின்­றது.

இது­கு­றித்து தீர்க்­க­மான அர­சியல் நிலைப்­பாட்­டுக்கு வரு­வது வர­வேற்­கத்­தக்­கது. இதன் ஆரம்­ப­மாக தேசிய நலன்கள் குறித்து பாரா­ளு­மன்­றத்தில் விவா­திக்­கப்­ப­டும்­போது, ‘வேற்­று­மைக்கு மத்­தியில் ஒற்­றுமை’ என்ற புதிய அர­சியல் கலா­சார ஒழுங்­கு­மு­றையை முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கடைப்­பி­டிக்கும் வகையில் ஒழுக்கக் கோவை உரு­வாக்­கப்­பட்டு,

‘முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் ஒன்­றியம்’ உரு­வாக்­கப்­படல் வேண்டும். முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் இலக்கு, தூர­நோக்கு என்­ப­ன­வற்றை அடிப்­ப­டை­யாகக் கொண்டு எதிர்­வரும் 2020 ஆம் ஆண்டு வரை பய­ணிக்க வேண்டும். முஸ்லிம் சிவில் அமைப்­புக்­களின் வழி­காட்டல் ஆலோ­ச­னை­யுடன் ஐந்­தாண்டுத் திட்­ட­மொன்றை தயா­ரிக்க வேண்டும். இதற்­கேற்­ற­வ­கையில் முஸ்லிம் கவுன்சில், ஜம்­இய்­யதுல் உலமா, ஷுரா கவுன்சில் ஆகிய அமைப்­புக்­க­ளுடன் இணைந்து முழுநாள் செய­ல­மர்­வு­களை நடத்­து­வது வர­வேற்­கத்­தக்­கது. தேர்தல் வாக்­கு­று­திகள் வரு­டாந்த வேலைத்­திட்­டத்தில் உள்­ள­டக்­கப்­ப­டு­கின்­ற­னவா? இல்­லையா? என்­பது குறித்த மதிப்­பீடு, கணிப்­பீட்­டினை மேற்­கொள்­வது அவ­சி­ய­மாகும்.

இது தேசிய நீரோட்­டத்தில் முஸ்லிம் விவ­காரம் சமாந்­தர ரீதியில் கவ­னஞ்­செ­லுத்­தப்­பட வழி­யேற்­படும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. இதற்­காக துறைசார் நிபு­ணர்கள், முஸ்லிம் கல்­வி­யி­ய­லா­ளர்கள் ஆகியோர் முஸ்லிம் பாரா­ளு­மன்ற ஒன்­றி­யத்­துடன் இணைந்து தொண்டர் அடிப்­ப­டையில் பணி­யாற்ற முன்­வ­ர­வேண்டும்.
அபி­வி­ருத்தி அர­சியல், உரிமை அர­சியல் இரண்டும் சமாந்­த­ர­மாக செல்­லத்­தக்க வகையில் முஸ்லிம் அமைச்­சர்கள் புரிந்­து­ணர்­வுடன் பணி­யாற்றும் அதே­வேளை,

‘கனவான் அர­சியல் செல்­நெறி’ புதிய அர­சியல் கலா­சா­ரத்தில், நல்­லாட்­சியில் பங்­க­ளிப்புச் செய்யும் வகையில் காத்­தி­ர­மான ஒரு­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட திசை­மு­கப்­ப­டுத்தல் செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­படல் வேண்டும். எதிர்­கால முஸ்லிம் அர­சியல், தேர்தல் நடை­மு­றை­களில் முஸ்லிம் பாரா­ளு­மன்ற பிர­தி­நி­தித்­துவம் பாதிக்­கப்­ப­டாத வகையில் வினைத்­தி­றன்­மிக்க அர­சியல் மயப்­ப­டுத்­த­லுக்கு இளைஞர் சமூ­கத்தை வழி­ந­டத்தும் தலை­மைத்­துவப் பயிற்சி, திறன் விருத்திப் பயிற்சி போன்றவற்றில் பிரதேச சமூக ஸ்தாபனங்களோடு இணைந்து செயற்பட வேண்டும். அத்துடன் அதற்கான நிதியொதுக்கீடுகளை மேற் கொள்ள முன்வரவேண்டும்.

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இஸ்லாமிய சன்மார்க்கக் கடமைகள், அழகிய முன்மாதிரிகள், பல்லின சமூக கலாசாரங்களிடையே நல்லிணக்கம், சகவாழ்வு போதனைகளை இறுக்கமாக செயற்படுத்துவதோடு,

எச்சந்தர்ப்பத்திலும் இஸ்லாமிய தனித்துவத்தை விட்டுக் கொடுக்காது பணியாற்ற முன்வர வேண்டும் என்றும் விபரிக்கப்பட்டுள்ளது.

Related Post