Breaking
Fri. Dec 27th, 2024

வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் அமைச்சர் சஜீத் பிரேமதாச அவர்களின் “செமட செவன” தேசிய வீடமைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் நடை முறைப்படுத்தப்பட்டு வரும் வீட்டுத் திட்டத்துக்கான மாதிரிக் கிராமத்துக்கான அங்குரார்ப்பண நிகழ்வு கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நடுவூற்றுப் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வானது இன்று (11) சனிக் கிழமை துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் அவர்களினால் வீட்டுத் திட்டத்துக்கான அடிக்கல் நட்டு வைக்கப்பட்டது.

தெரிவு செய்யப்பட்ட 100 பயனாளிகளுக்கான மாதிரிக் கிராம வீட்டுத் திட்டங்கள் இதன் போது உருவாக்கப்படுவதற்கான அடிக்கல் பிரதியமைச்சரால் நட்டு வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.ஹனி, பிரதியமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் டாக்டர் ஹில்மி முகைதீன் பாவா, தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர் திருக்குமரன் , கிண்ணியா நகர சபை உறுப்பினர் நிஸார்தீன் முஹம்மட், பிரதேச சபை உறுப்பினர் ராலியா உள்ளிட்ட பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டார்கள்

Related Post