Breaking
Sat. Nov 16th, 2024

பாகிஸ்தானின் நன்கு அறியப்பட்ட பிரபல சமூக சேவகர் அப்துல் சத்தார் எதி ( வயது 87)  இவர் உடல் நலகுறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

அவரை பார்க்கச் சென்ற பாடகி ரிஸ்வி சிரித்தபடி உடல் நலகுறைவாக படுக்கையில் சிகிச்சை பெற்று வரும் அப்துல் சத்தார் மற்றும் அவரது மனைவியுடன்  செல்பி புகைப்படம் எடுத்து அதை தனது பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார். இதை பார்த்த இணையத்தள பாவனையாளர்கள் கடுமையான விமர்சனங்களை பதிவு செய்துள்ளனர்.

அவர் பதிவேற்றம் செய்திருந்த புகைப்படத்துடன் ’90 வயது தன்னலமற்ற சேவைக்கு தனது வாழ்க்கையை அர்பணித்துள்ளார் என குறிபிட்டுள்ளார்.

பாடகி ரிஸ்வி, அப்துல் சத்தாரின் சேவையை பாராட்டி இருந்தாலும் அவரது செல்பி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் சவூதி அரேபியாவைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் தன்னுடைய இறந்து போன தாத்தாவுடன் படுக்கையில் செல்பி எடுத்து கொண்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தமை தொடர்பாக விசாரணை நடத்த சவூதி அரேபிய அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Post