செல்பி எடுக்கும் மோகத்தைப் போக்க ஆன்டி-செல்பி மாத்திரைகள் தற்போது வெளிவந்துள்ளன.
நம்மை நாமே புகைப்படம் எடுத்துக்கொள்ளும் பழக்கம் நாளுக்கு நாள் மக்களிடையே அதிகரித்துக்கொண்டே போகின்றது. சிறப்பான செல்பி எடுக்கும் முயற்சியில் உலகெங்கிலும் பலர் இதுவரை உயிரிழந்துள்ளனர். எனினும், நாம் அதிகளவில் செல்பி எடுப்பதை நிறுத்துவதாக இல்லை.
இந்நிலையில், இங்கிலாந்தில் செல்பி மோகத்தைப் போக்கும் மாத்திரைகள் என்ற பெயரில் (‘மிண்ட்ஸ்’ – புதினா வாசனையுடன் கூடிய இனிப்பு) விற்பனைக்கு வந்துள்ளன.
இந்திய மதிப்பில் சுமார் ஆயிரம் ரூபாய்க்கு தற்போது விற்பனையாகும் இது போலி மருந்தாக இருந்தாலும், ஒரு பிளாசிபோ விளைவை (போலியான மருந்து: நோயாளி இந்த மருந்து நம்மைக் குணப்படுத்தும் என்கிற எண்ணத்தினாலேயே நம்பி உட்கொள்வதால் தனது பிரச்சனையிலிருந்து மீள்வது) ஏற்படுத்தலாம் என நம்பிக்கைக் கொள்வோம்.