செல்போனில் தங்களை அழகாக செல்பி படம் பிடித்து அதனை திரும்ப… திரும்ப ரசித்துப் பார்ப்பதில் பலருக்கு பிரியம். இப்படி தங்களை செல்பி எடுக்கும் பலர் அந்த போட்டோக்களை நண்பர்களுக்கும் அனுப்பி வைக்கிறார்கள். குறிப்பாக செல்போனில் வாட்ஸ்-அப் வசதி வந்த பின்னர், செல்பி போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் அதிகமாக பகிரப்படுகிறது.
செல்பி ஆசையால் பலர் தங்களின் உடல் அழகை படம் பிடித்து ரசிக்கிறார்கள். இளம் தம்பதிகள் சிலர் தாங்கள் நெருக்கமாக இருக்கும் காட்சிகளையும் செல்பியாக படம் பிடித்து பார்க்கிறார்கள். உடனே அதனை அழித்தும் விடுகிறார்கள். ஆனால் ‘‘ரெக்கவரி சாப்ட்வேர்’’ போட்டு தங்களது செல்போனில் பதிவாகி இருக்கும் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை திரும்ப எடுக்க முடியும் என்பதை பலர் மறந்து விடுகிறார்கள்.
மேலும் முகம் தெரியாத பெண்களில் தொடங்கி பிரபலமான நடிகைகளின் ஆபாச வீடியோக்கள் வரை எல்லாம் ‘வாட்ஸ் அப்’ மூலம் பரவி விடுகிறது. இதில் பெரும்பாலானவை ‘செல்பி’ வீடியோக்கள் என்பதுதான் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் இளம் பெண்களே… இனியாவது உஷாராக இருங்கள். உங்களை அழகாக படம் எடுங்கள்… அதில் தப்பில்லை. நாம் தானே பார்க்கப் போகிறோம். பார்த்துவிட்டு அழித்து விடலாம் என்று மட்டும் நினைக்காதிர்கள்… ‘‘எப்போதுமே அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதை மனதில் கொள்ளுங்கள்’’ இது போன்ற செல்பி பாதிப்புகள் பற்றி போலீஸ் தரப்பில் கேட்ட போது, ‘‘ செல்பி புகைப்படங்களால் பாதிக்கப்பட்டு பதறுவதை விட வரும் முன் காப்பதே நல்லது. எனவே இளம் பெண்கள் உஷாராக இருக்க வேண்டும்’’