Breaking
Mon. Dec 23rd, 2024

கட்டாக்காலி நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதால் அதனை கட்டுப்படுத்துவதற்கு தேசிய ரீதியில் வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்ப்படவுள்ளது. அதற்கான அனுமதியினை அமைச்சரவை வழங்கியுள்ளது. குறித்த வேலைத்திட்டம் மாகண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சின்கீழ் முன்னெடுக்கப்படவுள்ளது. எனவே வீடுகளில் செல்லப்பிராணிகளாக வளர்க்கும் நாய்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். பதிவு செய்யத் தவறின் 10ஆயிரம் ரூபா தண்டம் செலுத்துவதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறன.

குறித்த வேலைத்திட்டம் தொடர்பில் மாகண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் பைஸர் முஸ்தபாவிடம் வினவியபோது,

கட்டாக்காலி நாய்களின் அதிகரிப்பினால் மக்கள் பல்வேறு பிரச்சினைகள் எதிர்கொண்டுள்ளனர். நாடுபூராகவும் ஐந்து இலட்சம் கட்டாக்காலி நாய்கள் உள்ளன. கொழும்பில் மாத்திரம் 16 ஆயிரத்திற்கும் அதிகமான கட்டாக்காலி நாய்கள் உள்ளன.  இதனால் தினந்தோறும் மக்கள் பல்வேறுபட்ட பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர். பஸ் தரிப்பிடம், புகையிரத நிலையம், சந்தைத் தொகுதி உட்பட பொது இடங்கிளில் கட்டாக்காலி நாய்களின் தொல்லை அதிகளவில் உள்ளதாக  மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

எனவே இப்பிரச்சினையைத் தீர்க்க தேசிய ரீதியில் நிகழ்ச்சித்திட்டம் ஒன்றை அமுல்படுத்த வேண்டியுள்ளளது. விசர்நாய்க்கடி நோயினை தடுபப்தற்கான வேலைத்திட்டம் நடைமுறையில் உள்ளது. எனினும் அதனையும் விஸ்தரிக்க வேண்டியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் செல்லப்பிராணி வளர்ப்புடன் தொடர்புடைய அரச சார்பற்ற நிறுவனங்களுடனமும் பேச்சுவார்ததை நடத்தியுள்ளோம்.

நாய்களைக் கொல்வது மற்றும் இடமாற்றம் செய்வது என்பன  இப்பிரச்சினைக்குத் தீர்வாக அமையப் போவதில்லை. எனவே இவ்விடத்தில் உரிய தீர்வினை முன்வைக்குமாறு அமைச்சரவை எதிர்பார்க்கிறது. ஆகையினால் சகலரினதும் ஆலோசனைகளைப் பெற்று தேசிய நிழ்ச்சித்திட்டம் ஒன்றை முன்வைக்க வேண்டியுள்ளது.  குறித்த திட்டத்தினை சர்வதேச ரீதியில் செயற்படும்  அரச சார்பற்ற நிறுவனங்களையும் இணைத்துக்கொண்டு செயற்படுத்த வேண்டியுள்ளது.

மேலும் செல்லப்பிராணிகளாக வளர்க்கும் நாய்களை பதிவு செய்வதற்கான சட்டபூர்வ ஒழுங்கொன்றுள்ளது. அதனை மக்கள் பின்பற்றுவதாக இல்லை. எனவே அதனையும் நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது. அவ்வாறு பதிவுசெய்யப்படும் செல்லப்பிராணிகள் உரிமையாளிரின் பொறுப்பில் இருக்க வேண்டும். அதனால் பொதுமக்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுமாயின் செல்லப்பிராணியின் உரிமையாளர்களே அதற்குப்பொறுப்புக்கூற வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

By

Related Post