Breaking
Mon. Dec 23rd, 2024
ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி சேனக டி சில்வா தலைமை வகிக்கும் ‘அபே ஜாதிக பெரமுன கட்சி, ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணியமைக்க தீர்மானித்துள்ளதாக அந்தக் கட்சியின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சேனக டி சில்வா, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் பிரத்தியேக செயலாளராக பணியாற்றியதுடன், 2010ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் பின்னர், இவர்கள் இருவரும் கடந்த அரசாங்கத்தினால் சிறைபிடிக்கப்பட்டனர் என்பது நினைவூட்டத்தக்கது.

சரத் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சியும், இன்னும் சில நாட்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டணியுடன் இணைவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்த்தில் கையெழுத்திடவுள்ளது.

இந்த இரண்டு கட்சிகளின் தலைமைகளும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையுடன் தற்போது இது குறித்து பல சுற்றுப் பேச்சுக்களை நடத்தி, இணக்கத்திற்கு வந்துள்ளதாக அந்தக் கட்சிகளின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

By

Related Post