வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட கொட்டதெனியாவயைச் சேர்ந்த 5 வயது சிறுமியான சேயா சந்தவமியின் படுகொலைச் சம்பவம் தொடர்பான விசாரணையின் போது, பாடசாலை மாணவன் மற்றும் பிள்ளையொன்றின் தந்தை ஆகிய அப்பாவிகளைக் கைதுசெய்தமைக்காக, பொலிஸார் ஐவருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த ஐவருக்கு எதிராகவும், பாடசாலை மாணவனிடமிருந்த பெற்றுக்கொண்ட பொருளை மீளவும் கையளிக்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. கொட்டதெனியாவ பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி, குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட ஐவருக்கு எதிராகவே வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாணவன் மற்றும் பிள்ளையொன்றின் தந்தை ஆகியோரைக் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட உதவி பொலிஸ் அதிகாரி தலைமையிலான குழுவே மேற்கண்டவாறு பரிந்துரை செய்துள்ளது.