Breaking
Sat. Dec 21st, 2024
-முஸாதிக் முஜீப்-
அக்கரங்க பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி சேயா செதவ்மி (5 வயது) என்ற சிறுமி பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் குற்றவாளியை உடனடியாக கைது செய்து உரிய தண்டனை வழங்குமாறு வற்புறுத்தியும் நீர்கொழும்பு பெரியமுல்லையில் வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையின் பின்னர் அமைதி ஊர்வலம் ஒன்று இடம்பெற்றது.
நீர்கொழும்பு பெரியமுல்லை ஜும்மா பள்ளிவாசல் நிருவாக சபையின் ஆலோசனையுடன் நீர்கொழும்பு முஸ்லிம் இளைஞர் அமைப்பு இந்த எதிர்ப்பு நடவடிக்கையை ஏற்பாடு செய்திருந்தது.
இந்த அமைதி ஊர்வலத்தில் பங்கு பற்றிய பல நூற்றுக்கணக்கான பொது மக்கள் கண்டன வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியிருந்து அமைதியான முறையில் தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
1 3 4 6

Related Post