Breaking
Tue. Dec 24th, 2024

நடை­பெற்று முடிந்த பாரா­ளு­மன்றத் தேர்­த­லின்­போது சொத்து விப­ரங்­களை வெளியி­டாத வேட்­பா­ளர்­க­ளுக்கு எதி­ராக வழக்குத் தாக்கல் செய்ய நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டு­வ­ரு­வ­தாக தேர்­தல்கள் ஆணை­யாளர் தெரி­வித்தார்

பாரா­ளு­மன்றத் தேர்­த­லுக்­கான வேட்­பு­மனு தாக்கல் செய்த பின்னர், சொத்து விப­ரங்­களை வெளியி­டு­மாறு சகல வேட்­பா­ளர்­க­ளுக்கும் தேர்தல் செய­ல­கத்­தினால் அறி­வு­றுத்­தப்­பட்­டது.

சொத்து விப­ரங்­களை வெளியி­டாத எந்­த­வொரு வேட்­பா­ள­ருக்கும் வேட்­பாளர் அடை­யாள அட்டை வழங்­கப்­பட மாட்­டாது என்று தேர்­தல்கள் ஆணை­யாளர் மஹிந்த தேசப்­பி­ரிய அறி­வித்­தி­ருந்தார்.

வேட்­பாளர் அட்டை இல்­லாத வேட்­பா­ளர்கள் தேர்­தல்கள் திணைக்­க­ளத்தால் வழங்­கப்­படும் எந்­த­வொரு சலு­கை­களையும் பெற்­றுக்­கொள்ள முடி­யா­தெ­னவும், குறைந்த பட்சம் வாக்­க­ளிப்பு நிலை­யத்­திற்கும் செல்ல அனு­மதி வழங்­கப்­பட மாட்­டா­தெ­னவும் அவர் தெரி­வித்­தி­ருந்­த­தோடு, தேர்­தலில் போட்­டி­யிடும் வேட்­பா­ளர்கள் சொத்து விப­ரங்­களை வெளியிட வேண்­டு­மென தேர்­தல்கள் திணைக்­க­ளத்தால் ஏற்­க­னவே அறி­வு­றுத்தல் விடுக்­கப்­பட்­டது. இந்­நி­லையில், பிர­தான கட்­சி­களின் வேட்­பா­ளர்கள் உட்­பட பல வேட்­பா­ளர்கள் இன்னும் சொத்து விப­ரங்­களை வெளியி­ட­வில்லை.

எனினும் இத் தேர்­தலில் 6151 வேட்­பா­ளர்கள் போட்­டி­யிட்­டி­ருந்­த­போ­திலும் சுமார் 2000 இற்கும் அதி­க­மான வேட்­பா­ளர்கள் முழு­மை­யாக சொத்து விப­ரங்­களை வெளியிடவில்லையென தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில், இவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்து உரிய நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

Related Post