தாம் சோதிடத்தின் மீது நம்பிக்கை கொண்டவரல்ல என்று ஜனாதிபதி பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சோதிடக்காரர்கள், பொதுமக்கள் மத்தியில் பிழையான கருத்துக்களை பரப்புகின்றனர். தம்மை பற்றியும் சில சோதிடர்கள் பல கதைகளை கூறுகின்றனர்.
இந்தநிலையில் தாம் எதிர்வரும் முதலாம் திகதி நல்லாட்சி தொடர்பில் மஹிந்த ராஜபக்சவை விவாதத்துக்கு அழைத்துள்ளமையை மைத்திரிபால நினைவுப்படுத்தினார்.
அண்மையில் தாம் கூறிய கருத்துக்கு பிழையான அர்த்தம் கற்பிக்கப்பட்டுள்ளது. நாட்டில் இருந்து மஹிந்த ராஜபக்ச வெளியேற தடைவிதிக்கப்படும் என்று அர்த்தம் அதற்கு கற்பிக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.
எனினும் ஊழல் குற்றச்சாட்டைக் கொண்டேரே நாட்டில் இருந்து வெளியேற அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று தாம் கூறியதாக மைத்திரிபால சுட்டிக்காட்டினார்.