காலம்சென்ற சோபித்த தேரரை நினைவுகூறும் முகமாக, அனுராதபுரம் விலச்சி பிரதேசத்தில் சோபித்த ஹிமிகம கிராமத்தில் 153 வீடுகள் அமைத்து ஏழை மக்களுக்கு வழங்குவதற்காக அடிக்கல் நாட்டும் வைபவம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் (27) இடம்பெற்றது.
இவ் வீட்டுத்திட்டத்துக்காக இந்திய அரசு சுமார் 300 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. இந்நிகழ்வு அமைச்சர் சஜித் பிரேமதாச, அமைச்சர் பி.ஹெரிசன், அமைச்சர் கயந்த கருணாதிலக, அமைச்சர் தயா கமகே பாராளுமன்ற உறுப்பினர் சந்திம கமகே, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரத்திதலைவரும், அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இஷாக் ரஹுமான், வட மத்திய மாகாண எதிர்கட்சி தலைவர் அணில் ரத்நாயக ஆகியோரின் பங்கேற்புடன் நடைபெற்றது.
(ஸ)