Breaking
Wed. Dec 25th, 2024

சுகவீனம் காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாதுளுவாவே சோபித தேரரின் நலம் விசாரிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.

 

கடந்த பதினெட்டாம் திகதி இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.

கடுமையான சுகவீனம் காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாதுளுவாவே சோபித தேரரின் நலனை விசாரிப்பதற்காக மஹிந்த ராஜபக்ச குறித்த மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் வருகை தந்துள்ளார்.

இதன் போது இருவரும் சுமார் அரை மணிநேரம் சிநேகபூர்வ உரையாடலிலும் ஈடுபட்டுள்ளனர்.

மஹிந்த ராஜபக்சவின் வருகையின் பின்னர் சில மணிநேரங்களில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சோபித தேரர், தற்போது கோட்டே நாகவிகாரையில் வழமையான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளார்.

By

Related Post