Breaking
Wed. Jan 15th, 2025
நியாயமான சமூகத்திற்கான மக்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் தம்பர அமில தேரர் நியமிக்கப்பட்டுள்ளார்.

நியாயமான சமூகத்திற்கான மக்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக இருந்த மாதுளுவாவே சோபித தேரர் அண்மையில் காலமானதை அடுத்து, அந்த பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டது.

மாதுளுவாவே சோபித்த தேரரினால் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகளை அவ்வாறே முன்னெடுக்குமாறு நியாயமான சமூகத்திற்கான தேசிய அமைப்பின் நிறைவேற்று குழு, தம்மர அமில தேரரிடம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில்,

அதனை அவர் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், நிறைவேற்றுக் குழுவிற்கும் தேரருக்கும் இடையிலான சந்திப்புக்கள் கடந்த சில தினங்களாக இடம்பெற்றிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தேசிய பிக்கு முன்னணி உள்ளிட்ட பல பிக்குகளின் அமைப்புக்களின் தம்மர அமில தேரர் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post