Breaking
Mon. Dec 23rd, 2024
சமகால அரசியல் நிலவரங்களால் விரக்தியடைந்துள்ளமையால் அனைத்து அரசியல் நடவடிக்கைகளில் இருந்தும் விலக தீர்மானித்துள்ளதாக நியாயமான சமூகத்திற்கான தேசிய அமைப்பின் ஏற்பாட்டாளர் மாதுளுவாவே சோபித்த தேரர் தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நான் மேற்கொள்ளும் தீர்மானங்கள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு விழிப்புணர்வு செய்தேன்.
நியாயமான சமூகத்திற்கான தேசிய அமைப்பினை தொடங்கி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்கு வரையில் நடத்தி வந்தேன்.
நான் எதிர்பார்த்த தேசிய அளவிலான முக்கிய செயற்பாடுகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாமையினால் விரக்தியடைந்துள்ளேன். இதன் பின்னர் எந்தவொரு நபரையும் நான் நம்புவதற்கு தயாராக இல்லை.
நான் தற்போது அனைத்து நடவடிக்கைகளில் இருந்து விலகி எனது வேலையை மாத்திரம் பார்த்துக்கொண்டுள்ளேன்.
நியாயமான சமூகத்திற்கான தேசிய அமைப்பினூடாக எதிர்பார்த்தவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியவில்லை.
யாருடன் வேலை செய்வது? எங்களுக்கு இலாபங்களையும், பிரயோசனங்களையும் எதிர்பார்க்கவில்லை, நாட்டிற்கு நல்லதை எதிர்பார்த்தே செயற்பட்டேன், யாருக்கும் அதனை செய்ய முடியாதென்றால் என்ன செய்வது?
நான் இவற்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமும் கூறினேன் என மாதுளுவாவே சோபித்த தேரர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related Post