-அஷ்ரப் ஏ சமத் –
ஜக்கிய நாடுகள் அமையத்தின் இளைஞா் அமைப்பின் தேசிய இளைஞா் அமைப்பின் 2 நாட்கள் கொண்ட சர்வதேச மாநாடு கொழும்பில் இன்று (20) பண்டாரநாயக்க ஞாபகாா்த்த மண்டபத்தில் நடைபெற்று வருகின்றது. இம் மாநாடு இளைஞா் அமைப்பின் செயலாளா் நாயகம் இன்சாப் பாக்கீா் மாக்காா் தலைமையில் இன்று காலை ஆரம்பமானது. இம்மாநாட்டிற்கு ஜக்கிய நாடுகள் உறுப்புரிமை நாடுகளின் இளைஞா் பிரநிதிகள் உட்பட 200 இளைஞா்கள் கலந்து கொள்கின்றனா்.
ஆரம்ப வைபத்தில் உயா்கல்வி இராஜாங்க அமைச்சா் மோகன் லால் கேரு, பிரதி அமைச்சா் இரான் விக்கிரமரத்தின முன்னாள் அமைச்சா் இம்தியாஸ் பாக்கீர் மாா்க்காா் கலந்து கொண்டனா்.
இவ் இளைஞா்கள், பொருளாதார வளா்ச்சி, உணவு பாதுகாப்பு, மற்றும் ஊட்டச் சத்து., உலகமயமாக்கல், நிலையான அபிவிருத்தி குறிக்கோள்கள், புத்தாயிரம் ஆண்டு வளா்ச்சி, புவி, மற்றும் செழிப்பு, சமுக, சூ ழல், ஆட்சி முறைமை போன்ற தலைப்புக்கள்களை இம் மாநாட்டில் கலந்து கொண்டு தமது தீர்மாணங்களை ஜக்கிய நாடுகள் அமையத்தில் செயலாளா் நாயகம் அறிக்கை சமா்ப்பிப்பாா்கள்.