மாத்தளை திம்புல்கமுவ பிரதேசத்தில் கடந்த 1999ம் ஆண்டு இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித படுகொலை தொடர்பிலான சந்தேகத்தின் பேரில், நாடாளுமன்ற உறுப்பினர் ஜனக பண்டார தென்னக்கோன் கைது செய்பய்பட்டிருந்தார்.
கடந்த மாதம் 20ம் திகதி சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது.
உடல் நலக்குறைவினால் சிகிச்சை பெற்று வந்த வந்த ஜனக பண்டார தென்னக்கோன் இன்று நீதிமன்றில் முன்னிலையாகவுள்ளார்.
சந்தேக நபரை மருத்துவ சான்றிதழுடன் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு மாத்தளை மேலதிக நீதவான் சம்பத் கமகே பணித்திருந்தார்.
மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் அலுவிஹாரே செய்த முறைப்பாட்டுக்கு அமைய, புலனாய்வுப் பிரிவினர் ஜனக பண்டார தென்னக்கோனை கைது செய்திருந்தனர்.
ஜனக பண்டார தென்னக்கோனுக்கு எதிராக மேலும் கொலைக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.