Breaking
Sat. Nov 16th, 2024

லங்கை நாடானது ஒரு ஜனநாயக நாடாக இருக்கின்ற போதும் இன்று சிறுபான்மை மக்கள் உரிமைக்காக போராடும் துர்பாக்கிய நிலை காணப்படுகின்றது. என கைத்தொழில் வர்த்தகம் இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் கூட்டுறவு அபிவிருத்தி மற்றும் திறன் அபிவிருத்தி தொழில் பயிற்சி அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் பிரத்தியோக செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான றிப்கான் பதியுதீன் அவர்கள் தன் அனுதாபத்தினை இவ்வாறு தெரிவித்தார்.

உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர் தமிழ் மற்றும் முஸ்லீம் சிறுபான்மை சமூகம் தனது உரிமைக்காக அன்றிலிருந்து இன்றுவரை மேற்கொள்கின்ற போராட்டத்திற்கு இன்றுவரை எந்தவொரு தீர்வும் அரசாங்கத்திடம் இருந்து கிடைக்கப்பெறவில்லை குறிப்பாக காணாமல்போனோர் மற்றும் இராணுவத்தினால் பிடிக்கப்பட்ட மக்கள் காணிகள் போன்று தீர்வுகள் கிடைக்காத பல பிரச்சனை சிறுபான்மை மக்களை பெரிதும் கஷ்டத்திற்கு கொண்டு செல்கின்றது ஒரு நாடு சிறந்த வருமானம் கொண்ட நாடாக மாற்றமடைய வேண்டுமானால் நாட்டு மக்கள் அதிகமாக உழைக்க வேண்டும் ஆனால் இன்று அவர்கள் உழைப்பிற்காக செலவு செய்யும் நேரத்தினை விட தன் உரிமைகளை பெற்றெடுக்க செலவு செய்யும் நேரம் அதிகமாக இருக்கின்றது இவ்வாறான நிலைகள் தொடருமானால் எமது நாடு மிகவும் ஒரு பின்தள்ளப்பட்ட நாடாக மாறுவதற்க சந்தர்ப்பங்கள் அதிகம் காணப்படுகின்றது.

அண்மையில் முசலி பிரதேச சபை பிரிவிற்குட்பட்ட சிலவத்துறை கிராம மக்களால் நடாத்தப்பட்டு வரும் மண் மீட்பு போராட்டம் 30 நாட்களை கடந்து சென்றும் அரசாங்கம் இதுவரை எந்த தீர்வினையும் மக்களுக்கு கொடுக்க வில்லை அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தவும் இல்லை அதே போன்று புத்தளம் அறுவைக்காடு குப்பை பிரச்சனை தொடர்பாக போராட்டங்களை நடத்தி வருகின்றார்கள் ஆனால் அதற்கும் தீர்வுகள் கிடைக்கவில்லை. மக்களுக்காகவே அரசாங்கம் திட்டங்களை கொண்டு வர வேண்டுமே தவிர அரசாங்க திட்டங்களை மக்கள் மீது பலவந்தமாக திணிக்கும் படியான திட்டங்களை செயல்படுத்தக்கூடாது.

நிலம் என்றும் அவரவர் உரிமை அது யாராக இருந்தாலும் விட்டுக்கொடுக்க முடியாது எனவே அரசாங்கம் மிக விரைவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் மக்களுக்கான தீர்வினை வழங்க வேண்டும்.

Related Post