Breaking
Mon. Dec 23rd, 2024

தமிழ் அர­சியல் கைதிகள் விட­யத்­திற்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இன்றைய தினம் தனது பதிலை வழங்­க­வுள்ள நிலையில் உண்­ணா­வி­ர­த­மி­ருக்கும் கைதி கள் மற்றும் அவர்­களின் உற­வி­னர்கள் பலத்த எதிர்­பார்ப்­பு­டனும் நம்­பிக்­கை­யு­ட­னு­ம் இருக்கின்றனர்.

நீண்­ட­கா­ல­மாக நாடளா­விய ரீதியில் உள்ள தமிழ் அர­சியல் கைதிகள் தமது விடு­த­லையை ஆட்­சி­மாற்­றத்தின் பின்னர் வலி­யு­றுத்தி வந்­தி­ருந்­தனர்.

இந்­நி­லையில் கடந்த மாதம் 12ஆம் திகதி சாகும் வரை­யி­லான உண்­ணா­வி­ர­தப்­போ­ராட்­டத்தை ஆரம்­பித்­தி­ருந்­தனர்.

ஐந்து தினங்­களின் பின்னர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன வழங்­கிய வாக்­கு­று­திக்கு அமை­வாக எதிர்க்­கட்­சித்­த­லை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் மகசின் சிறைச்­ச­லைக்குச் சென்று நேரில் வழங்­கிய உறு­தி­மொ­ழி­யை­ய­டுத்து உண்­ணா­வி­ர­தத்தை கைதிகள் இடை­நி­றுத்­தி­யி­ருந்­தனர்.

இருப்­பினும் வழங்­கப்­பட்ட வாக்­கு­றுதி நிறை­வேற்­றப்­ப­டா­மை­யை­ய­டுத்து கடந்த 8ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை முதல் மீண்டும் சாகும் வரை­யி­லான உண்­ணா­வி­ர­தப்­போ­ராட்­டத்தை ஆரம்­பித்­தி­ருந்­தனர்.

இவ்வாறான பின்னணியில் கடந்த வியா­ழக்­கி­ழ­மை­யன்று வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஷ்வன் தலை­மை­யி­லான மாகாண அமைச்­சர்கள் நால்­வரும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை சந்­தித்­தி­ருந்­தனர். இச்­சந்­திப்பின்­போது கைதி­களின் விடுதலை தொடர்­பாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வி­டத்தில் வடக்கு முதல்வர் வலி­யு­றுத்­தி­யி­ருந்தார்.

அதற்­க­மை­வாக சில அர­சியல் பிரச்­சி­னைகள் காணப்­ப­டு­வ­தாக குறிப்­பிட்ட ஜனா­தி­பதி தடுத்­து­வைக்­கப்­பட்­டுள்­ள­வர்­களின் விப­ரங்கள் அவர்­களின் கோப்­புக்கள் உள்­ளிட்ட அனைத்து விட­யங்­க­ளையும் தன்­னி­டத்தில் இன்று திங்­கட்­கி­ழமை சமர்ப்­பிக்­கு­மாறு சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­திற்கு பணிப்­புரை விடுத்­தி­ருந்தார். அத­னை­ய­டுத்து கைதி­களின் விட­யத்­திற்கு உரிய பதிலை இன்று வழங்­கு­வ­தா­கவும் அவர் உறு­ய­ளித்­தி­ருந்தார்.

இந்­நி­லையில் இன்­றைய தினம் ஜனா­தி­பதி மைத்திரிபால சிறிசேன தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்திற்கு உரிய பதிலை வழங்குவார் என நம்பிக்கை கொண்டிருப்பதாக உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளும், அவர்களது உறவினர்களும் எதிர்பார்ப்புக்களும் நம்பிக்கையுள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post