Breaking
Mon. Dec 23rd, 2024

இலங்­கையின் அர­சி­ய­ல­மைப்பை மதிக்­காது அதனை தூக்­கி­யெ­றிய வேண்டும் எனக் கூறும் மஹிந்த ராஜபக் ஷவிற்கு பாரா­ளு­மன்றத் தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்கு தகு­தி­யில்­லை­யெனத் தெரி­வித்த சிறுவர் பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்­சரும், கொழும்பு மாவட்­ட ஐ.தே.முன்­ன­ணி வேட்­பா­ள­ரு­மான ரோஸி சேனா நாயக்க, ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இணைந்த ஆட்­சியே சிறப்­பான புரிந்­து­ணர்வு ஆட்­சி­யென்றும் தெரி­வித்தார்.

கொழும்பில் ஐ.தே.கட்­சியின் தேர்தல் பிர­சார அலு­வ­ல­கத்தில் நேற்றுமுன்தினம் செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் உரை­யாற்றும்போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் உரை­யாற்­று­கையில், மக்கள் தான் என்னை அர­சி­யலில் ஈடு­ப­டு­மாறு அழைப்பு விடுத்­தனர். எனவே அதற்கு நான் தலை­வ­ணங்­கினேன். மக்­களின் தீர்­மா­னமே உயர்­வா­னது. இதன்­போது இலங்­கையின் அர­சி­ய­ல­மைப்பை கவ­னத்தில் கொள்ள வேண்­டிய அவ­சி­ய­மில்லை. அதனை தூக்­கி­யெ­றிய வேண்டும் என மஹிந்த குறிப்­பிட்­டுள்ளார்.
இது பார­தூ­ர­மான இலங்­கையின் அர­சி­ய­ல­மைப்பை அவ­ம­திக்கும் கருத்­தாகும். நாம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக தெரிவு செய்­யப்­பட்­டதும், நாட்டின் அர­சி­ய­ல­மைப்பின் மீது சத்­தியப் பிர­மாணம் செய்தே உறுப்­பினர் பத­வியை ஏற்றுக் கொள்­கிறோம்.

இந்த நிலையில் மஹிந்த அர­சி­ய­ல­மைப்பை அவ­ம­தித்­துள்ளார். அது அவர் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்கு தகு­தி­யா­ன­வரா என்ற கேள்­வியை தோற்­று­வித்­துள்­ளது. நாட்டில் இன்று தேசிய பாது­காப்­பிற்கு அச்­சு­றுத்தல் ஏற்­பட்­டுள்­ள­தாக மஹிந்த கூறு­கின்றார்.

இன்று ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யி­னதும், ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி­யி­னதும் தலை­வ­ராக ஜனா­தி­ப­தியே உள்ளார். ஜனா­தி­ப­தியே பாது­காப்பு அமைச்­ச­ரா­கவும் இருக்­கிறார். எனவே, அக்­கட்­சியில் தேர்­தலில் போட்­டி­யிடும் மஹிந்த, தேசிய பாது­காப்­பிற்கு அச்­சு­றுத்தல் எனக் கூறு­வது ஜனா­தி­ப­தியை விமர்­சிப்­ப­தாகும்.

கடந்த 20 வரு­டங்­க­ளாக பிர­த­ம­ராக, ஜனா­தி­ப­தி­யாக பதவி வகித்த மஹிந்த, யுத்­தத்தின் போதும் யுத்தம் முடிந்த பின்­னரும் நாட்­டுக்கும் மக்­க­ளுக்கும் நன்­மை­களை செய்­ய­வில்லை. மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்மை இருந்தும் ஊழி­யர்­களின் சம்­பளம் அதி­க­ரிக்­கப்­ப­ட­வில்லை. அத்­தி­யா­வ­சியப் பொருட்­களின் விலை­களை குறைக்­க­வில்லை. வரிகள் உயர்த்­தப்பட்டன. அப்­போ­தெல் லாம் வாயை மூடிக்­கொண்டு மௌன­மாக இருந்த மஹிந்த இன்று பொய்­யான வாக்­கு­று­தி­களை அள்ளி வீசு­கின்றார்.

ஆனால் எமது பிர­தமர் 60 மாதங்­களில் புதிய நாட்டை கட்­டி­யெ­ழுப்பும் தெளி­வான திட்­டத்தை முன்­வைத்­துள்ளார். 10 இலட்சம் தொழில்­வாய்ப்­புகள் உரு­வாக்­கப்­படும். அதற்­காக இலங்­கையில் தொழிற்சாலைகளை ஆரம்பிப்பதற்கு இப் போதே வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தயாராகவுள்ளனர் எனத் தெரிவித்தார்.

Related Post