ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கட்சி தலைவர்கள் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இடையில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கமைய இன்று காலை இக் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.
முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அனைத்து கட்சி தலைவர்களுக்குக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணி தலைவர் விமல் வீரவன்ச நேற்று குறிப்பிட்டிருந்தார்.
இக் கலந்துரையாடலில் தேசிய சுதந்திர முன்னணி கலந்துகொள்ளவுள்ள நிலையில் தங்கள் கருத்தை நேரடியாக ஜனாதிபதியிடம் முன்வைக்க எதிர்பார்ப்பதாக விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இணைந்து உருவாக்கவுள்ள தேசிய அரசாங்கத்திற்கான இணக்கப்பாடு தொடர்பில் இக் கலந்துரையாடலில் அவதானம் செலுத்தப்படவுள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.