Breaking
Tue. Nov 26th, 2024

நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்தை குறைத்து பாராளுமன்றுக்கு கூடிய அதிகாரத்தை வழங்க உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 67வது சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

வடக்கு – தெற்கு மக்களின் மனங்களை ஒன்றுபடுத்தி வாழக்கூடிய தருணம் ஏற்படும் என நம்புவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

வரலாற்று தவறுகளை அறிந்து அவற்றை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும் என ஜனாதிபதி கூறியுள்ளார்.

பிரித்தானிய காலனித்துவத்தில் இருந்தும் தீவிரவாதிகளிடம் இருந்தும் நாட்டை மீட்டெடுக்கப் போராடி உயிர்தியாகம் செய்த அனைவருக்கும் அஞ்சலி மற்றும் கௌரவம் செலுத்துவதாக ஜனாதிபதி கூறினார்.

நாட்டில் மீண்டும் தீவிரவாதம் தலைதூக்க அனுமதி அளிக்கப்படாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டில் தற்போது நிலவும் பிரச்சினைக்கு அனைத்து தலைவர்களும் ஒன்றிணைந்து தீர்வு பெற வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

நாட்டின் அனைத்து தரப்பு மக்களிடையே ஐக்கியம் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டியது அவசியம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

Related Post