இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முயற்சி பாராட்டுக்குரியது என அஸ்கிரி பீடாதிபதி வராகொட ஸ்ரீ ஞானரதன தேரர் தெரிவித்துள்ளார்.
பொல்கொல்ல ஸ்ரீ சலவான போதிமலு விஹாரையில் நேற்று (17) நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்…
நல்ல சிங்கள பௌத்தர் ஆகிய தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமாதான எண்ணங்களுடன் நாட்டின் அனைத்து இன சமூகங்கள் மற்றும் மதங்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்த எடுக்கும் முயற்சி வரவேற்கப்பட வேண்டியதாகும்.
நாட்டில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த ஜனாதிபதி அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றார்.
மக்களிடையே பேதங்கள் அற்றிருப்பது சமாதானத்திற்கு அவசியமானது.
பௌத்த மக்கள் ஏனைய இன சமூகங்களுக்கு தொல்லை கொடுப்பவர்கள் அல்லர்.
இந்த நாட்டை ஆட்சி செய்த ஏனைய ஆட்சியாளர்களைப் போன்றே ஜனாதிபதியும் நல்ல ஓர் பௌத்தராவார் என வராகொட ஸ்ரீ ஞானரதன தேரர் தெரிவித்துள்ளார்.