Breaking
Sun. Jan 12th, 2025

“ஜனாதிபதிக்கு கிடைக்கும் முன்னர் சட்டவிளக்கம் எவ்வாறு அரச ஊடகத்துக்கு சென்றது?” என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளது.

ஜனாதிபதிக்கு இந்த சட்டவிளக்கம் நவம்பர் 10ம் திகதியன்று கிடைத்தது. எனினும் அதற்கு முன்னர் நவம்பர் 9ம் திகதியன்று அரச ஊடகம் இந்த விடயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து தகவல்களை வெளியிட்டது.

எனவே இந்த விடயத்தை சாதாரணமானதாக எடுத்துக் கொள்ள முடியாது என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்க தலைவர் உபுல் ஜெயசூரிய குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது உயர்நீதிமன்றத்தில் எத்தனை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன, எத்தனை எதிராக தாக்கல் செய்யப்பட்டன போன்ற விபரங்கள் 9ம் திகதியன்றே விளக்கமாக கூறப்பட்டன.

உயர்நீதிமன்றத்தில் சட்டவிளக்கம் பதிவாளருக்கு செல்லும் முன்னரே ஊடகத்துக்கு சென்றது நிச்சயமாக உள்ளிருந்து கசிந்த விடயமாகவே கருதமுடியும்.

எனவே இந்த வரலாற்று தவறு தொடர்பில் உயர்நீதிமன்றம் இரகசிய பொலிஸாருக்கு விசாரணைக்கு உத்தரவிட்டவேண்டும் என்றார்.

Related Post