Breaking
Thu. Nov 14th, 2024

இலங்கை நாட்டில் வாழ்கின்ற சகல மக்களின் குறைகளையும் கேட்டறிந்து அவற்றிற்கான தீர்வுகளை உரிய அமைச்சுக்கள், அரசாங்க அலுவலகங்கள் மற்றும் திணைக்களங்களிலிருந்து அந்த மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதை நோக்கமாகக் கொண்டு ஜனாதிபதி செயலகத்தினால் புதிய சேவையொன்று ஆரம்பித்து வைக்கப்பட இருக்கின்றது.

“ஜனாதிபதிக்கு தெரிவிக்க” எனும் பெயரிலான இந்தச் சேவை எதிர்வரும் 8ம் திகதி காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட இருக்கின்றது. இந்த சேவையூடாக பொதுமக்கள் தங்களுடைய குறைகள் தேவைகள் மற்றும் யோசனைகளை ஜனாதிபதியின் கவனத்திற்கு நேரடியாக கொண்டுவரலம்.

1919 என்ற இலக்கத்தினை எந்தவொரு நிலையான மற்றும் கையடக்க தொலைபேசிகளுடாகவும் அழுத்தி இலக்கம் இரண்டை அழுத்துவதனூடாக இந்த சேவையினை பெற்றுக்கொள்ளலாம். அதேவேளை சிங்களம் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இச்சேவையினை பெற்றுக்கொள்ள முடிவும் என்பது விசேட அம்சமாகும்.

By

Related Post