இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நேற்று மாலை தொடக்கம் நள்ளிரவு வரை கொழும்பு, பௌத்த மகா சம்மேளன மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
இதில் பொதுபல சேனா, சிங்கள ராவய, ஹெல உறுமய, ராவணா பலய, பிக்சு பெரமுண , தர்ம விஜய பதனம, ஹெல ராவய உள்ளிட்ட சுமார் 53 அமைப்புகள் கலந்து கொண்டிருந்தன.
சிங்களவர்களின் எதிர்காலம் ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சியில் மட்டுமே பாதுகாக்கப்படும். சிங்கள பௌத்த நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் ஒரே தேசியத் தலைவர் அவர்தான்.
மேலும் ஏனைய இனங்களின் அழுத்தங்களுக்கு அடிபணியாமல் சிங்கள பௌத்தர்களின் நலன்களைப் பாதுகாப்பதில் கடந்த காலங்களில் ஜனாதிபதி சிறந்த முன்மாதிரியை வெளிக்காட்டியுள்ளார்.
எனவே அவருக்கே எதிர்வரும் தேர்தலிலும் ஆதரவை வழங்க வேண்டும் என்றும் இங்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பாக நாட்டின் அனைத்து விகாரைகள் வழியாகவும் அவ்வப்பிரதேச பொதுமக்களை அறிவுறுத்தி, மஹிந்தவுக்கு ஆதரவாக வாக்களிக்க வைப்பது முயற்சிக்க வேண்டும் என்றும் இதில் கலந்து கொண்டிருந்த பிக்குமார்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.