அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கான வர்த்தமானி அறிவிப்பு எதிர்வரும் 19 அல்லது 20ஆம் திகதிகளில் வெளியிடப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
வர்த்தமானியில் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதும், அன்றிலிருந்து 16 நாட்களுக்குள் வேட்புமனு கோரல் இடம்பெறும். இந்த வேட்புமனுத் தாக்கல் 30 நாட்களை தாண்டாது. வேட்புமனுத் தாக்கலின் பின்னர் 30 நாட்களுக்கு தேர்தல் பிரசாரங்கள் இடம்பெற்று தேர்தல் நடைபெறும். இது, 60 நாட்களை தாண்டிச் செல்லாது என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பிலுள்ள சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேற்கண்ட விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.