ஜனாதிபதித் தேர்தலுக்கு 6 லட்சம் பேர் தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பித்துள்ளதாக தேர்தல்கள் செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.
தற்பொழுது விண்ணப்பித்தவர்களின் தகுதிகள் பரீட்சித்துப் பார்க்கும் நடவடிக்கைகள் ஆரம்பித்துள்ளதாகவும் இதனை உறுப்படுத்தும் நடவடிக்கைகள் நாளை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று தேர்தல்கள் செயலகத்தில் நடைபெறும் தேர்தல் அதிகாரிகளின் கூட்டத்தின்போது தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பிக்கப்பட்டவர்கள் தொடர்பிலான இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.