2015 ஜனவரி முதல் வாரத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை குறி வைத்து அரசாங்கத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் தலைநகர் கொழும்பில் நேற்று இரண்டு கூட்டங்கள் நடைபெற்றன. இதன்படி, நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கக் கோரி ஜாதிக யஹல உறுமயவின் அத்துரலிய ரத்ன தேரர் தலைமையில் அரசுக்கு எதி ராகவும், ஜனாதி பதியின் கரங்களை பலப்படுத்தும் நோக்கில் தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியம் என்ற அமைப்பின் ஏற்பாட்டில் அரசுக்கு ஆதரவாகவும் கூட்டங்கள் நடத்தப்பட்டன. இதனால், கொழும்பு அரசியல் களம் நேற்று மாலை பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
ஜாதிக யஹல உறுமயவின் தவிசாளர் அத்துரலிய ரத்ன தேரர் மற்றும் மாதுலுவாவே சோபித தேரரின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டம் முத்தையா மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி. உள்ளிட்ட எதிர்க்கட்சிளும் சிவில் அமைப்புகளும் பங்கேற்றிருந்தன. அத்துடன், பொதுமக்களும் திரண்டிருந்தனர். அரசு பக்கம் பல்டியடிக்கவுள்ளார் என கூறப்பட்ட மங்கள சமரவீர எம்.பியும் இதில் பங்கேற்று ரணிலுடன் அமர்ந்திருந்தார்.
இதேவேளை, ஜனாதிபதி முறைமையினை நீக்குவது அடுத்தவொரு தீவிரவாதத்திற்கு வித்திடும் எனக் குறிப்பிட்டு, அடுத்த ஜனாதிபதி தேர்ஐதலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்வுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையில் தேசிய ஒருங்கிணைப்பு ஒன்ஐறிஐயத்ஐதினால் கொழும்பு சுகததாச உள்ளரங்கில் அரச ஆதரவாக கூட்டம் நடைபெற்றது. இதில் சிங்கள தேசியவாத அமைப்புகள் பல பங்கேற்றிருந்தன. (os)